நாகா சைதன்யா நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Naga Saithanya Love Story Trailer Released In Net

Naga Saithanya Love Story Trailer Released In Net

நாகா சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் ’லவ் ஸ்டோரி’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நாராயண் தாஸ் மற்றும் கோகன் ராவ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சேகர் கம்முளா அவர்களின் இயக்கத்தில் நாகா சைதன்யா மற்றும் சாய்பல்லவி இணைந்து நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெயிலரை உற்று நோக்குகையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் நடனத்தின் மூலம் ஒன்றிணைகிறார்கள். அவர்களுக்குள் காதல் மலருகிறது. அதற்கு பின் என்ன நடக்கிறது என்பது போல் அமைக்கப்பட்டிருக்கும் ட்ரெயிலர் சீன்கள், திரைக்கதையை கொஞ்சம் வெளிப்படுத்தினாலும், முழுக்கதையும் படம் வெளிவந்தாலே தெரியும்.

“ நடனம் என்றாலே சாய்பல்லவி ஒரு கலக்கு கலக்குவார். அந்த ஜார்னரில் ஒரு படமே என்றால் சும்மா விடுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம் திரைக்கதைக்கு ஏற்ப நாகா சைதன்யாவும் சாய்பல்லவியும் இணைந்து என்ன செய்திருக்கிறார்கள் என்று “

About Author