இந்தியா என்ற பெயரே பொருத்தமானதும் போதுமானதாகவும் உள்ளது – வெற்றிமாறன்
Name India Is Much Enough For Our Country Idamporul
இந்தியா என்ற பெயரே பொருத்தமானதும், போதுமானதாகவும் உள்ளதாக வெற்றிமாறன் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா என்ற பெயர் ‘பாரத்’ என மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டு இருக்கும் வேளையில் அதற்கு பரவலாக எதிர்ப்புகள் பெருகி வருகிறது. இந்தியா என்ற பெயரே நமது நாட்டிற்கு பொருத்தமானதும் போதுமானதுமாகவும் உள்ளதாக இயக்குநர் வெற்றிமாறனும் இது குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.
“ ஒரு குழப்பங்களை ஏற்படுத்தி அதை வைத்து அரசியல் செய்வதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறது ஒன்றிய அரசு, தற்போது அந்த வகையில் நாட்டிற்கான பெயர் மாற்ற குழப்பத்தை முன்னெடுத்து இருக்கிறது என பலரும் இணையங்களில் பதிவிட்டு வருகின்றனர் “