லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹாத் பசில், ஆன்டனி வர்கீஸ் என்று மிகப்பெரிய பட்டாளங்கள் களம் இறங்கும் விக்ரம் பட கூட்டணியில் தற்போது நடிகர் நரைனும் இணைந்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம்,அஞ்சாதே மற்றும் கடைசியாக கைதி என்று தான் நடித்த படத்தில் எல்லாம் தன் நடிப்பை நிரூபித்து இருப்பார் நரேன். விக்ரம் படத்தில் மட்டும் என்ன தன் நடிப்பை விட்டு வைப்பாரா என்ன கலக்குவார் பொறுத்திருந்து பார்க்கலாம்.
மாநகரம்,கைதி,மாஸ்டர் என்று மூன்று மிகப்பெரிய ஹிட் அடித்திருக்கும் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல் ஹாசனின் தீவிர ரசிகர். ஒரு ரசிகனுக்கு அவன் தலைவனாக நினைக்கும் ஹீரோவை திரையில் பார்ப்பதையே மிகப்பெரிய விஷயமாக கொண்டாடுவான். லோகேஷ் கனகராஜ்-யிற்கோ அவர் தலைவனாக கொண்டாடும் கமல் ஹாசனை இயக்கும் வாய்ப்பே கிடைத்திருக்கிறது என்றால் எப்படியும் களத்தில் மாஸ் காட்டுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
“ கமல் என்னும் ஒரு ஆத்ம நடிகனின் தீவிர ரசிகன் இயக்கும் படம், திரைக்கு வரட்டும் அவர் களத்தில் என்ன செய்திருக்கிறார் என்பதை ரசிக்க காத்திருப்போம் “