கிட்ட தட்ட 77 நாட்கள் கழித்து மணிப்பூர் கொடுரம் குறித்து வாயை திறந்து இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
மணிப்பூரில் கலவரங்கள் எல்லை மீறி தற்போது வரை 150க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இது போக இரண்டு பெண்கள் பாலியல் துன்புறுத்துதல்களுக்கு உட்படுத்தப்பட்டு ஆடையின்றி ஊர்வலம் செய்த கொடூரமும் அரங்கேறி இருக்கிறது. இது எல்லாம் கிட்டதட்ட 77 நாட்களுக்கு முன்பு நடந்த நிலையில் தற்போது அது குறித்து வாயை திறந்து கண்டனம் தெரிவித்து இருக்கிறார் நரேந்திர மோடி.
“ மதங்களை, மத உணர்வுகளை தூண்டி விட்டு கலவரங்களை கட்டுக்கடங்காமல் மேற்கொள்பவர்களுக்கு, ஆட்சி செய்பவர்கள் ஆதரவு தெரிவித்து வந்தால் இது போன்ற அட்டூழியங்கள் இனி தொடர்ந்து நடைபெற தான் செய்யும் என இணையவாசிகள் கொந்தளித்து வருகின்றனர் “