விசாகப்பட்டினத்தில் நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் திட்டம் தொடக்கம்
ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் 25 மெகாவாட் திறன் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் திட்டத்தை தொடங்கியுள்ளது தேசிய அனல்மின் கழகம்.
தொடர்ந்து புதுப்பிக்க கூடிய ஆற்றல்களை பயன்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்திவரும் நிலையில் 25 மெகாவாட் திறன் கொண்ட நாட்டிலேயே மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் திட்டத்தை ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தில் மாநில அரசின் உதவியுடன் சிம்ஹாத்ரி அனல்மின் நிலைய நீர் தேக்கத்தில் தேசிய அனல்மின் கழகம் துவங்கியுள்ளது. 75 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஒளிமின் அழுத்த தகடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது இந்த மிதக்கும் சோலார் மின் திட்டம்.
இத்திட்டம் கிட்டதட்ட 7000 வீடுகளுக்கு ஒளியூட்டுவது மட்டுமில்லாமல் வருடத்திற்கு 46,000 டன் கரியமில வாயுவின் பயன்பாட்டையும் குறைக்கும் என்று தேசிய அனல்மின் கழகத்தின் மண்டல நிர்வாக இயக்குநர் சஞ்சய் மதன் தன் அறிக்கையில் கூறி உள்ளார். இது மட்டும் இல்லாமல் இத்திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 1,364 மில்லியன் லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும் என்றும் அதன் மூலம் 6700 வீடுகளின் தண்ணீர் சேவையும் பூர்த்தி செய்யப்படும் என்றும் தேசிய அனல்மின்கழகம் அறிவித்துள்ளது.
” ஆற்றல் இன்றிமையாதது தான் இந்த உலகத்திற்கு, ஆனாலும் புதுப்பிக்கதகாத கரியமிலங்களின் மூலம் கிடைக்கின்ற ஆற்றல் இந்த உலகின் சூழ்நிலைகளையே மாற்றி பல இயற்கை பேரிடர்களை நிகழ்த்தி வரும் நிலையில் இனியாவது புதுப்பிக்கதக்க ஆற்றல்களின் மேல் நம்பிக்கையை வைத்து இந்த உலகத்தினையும் பூமியினையும் அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாப்பாக விட்டுச் செல்வோம் “