இயற்கையை மீட்டு தந்திருக்கிறதோ இந்த கொரோனோ காலம்…?
கொரோனோ என்னும் நுண்ணுயிரி மனித உயிர்களை இன்றளவும் வதைத்து வரும் நிலையில் அது உலகின் இயற்கையை மீட்டு தந்திருக்கிறது என்று கூறினால் நம்ப முடிகிறதா…? ஆம் உண்மையே..! காற்றின் தரம் உயர்ந்திருக்கிறது. நீரின் தரம் உயர்ந்திருக்கிறது. உலக வெப்பமயமாதல் குறைந்திருக்கிறது. இந்த கொரோனோ இயற்கைக்கு மட்டும் வரம் போல…!
உலகமே கொரோனோ என்னும் கொடூர கிருமியிடம் சிக்கி ஊரடங்கு என்னும் நிலையில் வீட்டிற்குள்ளேயே அடங்கி கிடக்கையில் சத்தமின்றி அரங்கேறி இருக்கிறது இந்த இயற்கை மாறுதல்கள். தொழிற்சாலைகள் இயங்கவில்லை, வாகனங்களின் இயக்கம் குறைவு, ஆறுகளில் கழிவுகள் மிதக்கவில்லை விளைவு காற்றின் தரம் உயர்வு, நீரின் தரம் உயர்வு, பனி உருகுதல் குறைவு, உலக வெப்பமயமாதல் குறைவு என்று இந்த கொரோனோ காலம் மனித இனம் சிதைத்த இயற்கையை எல்லாம் மறுபடியும் மீட்டு தந்திருக்கிறது என்றாலும் சிதைப்பதற்கே பிறந்தாற் போல மறுபடியும் யாவினையும் மாற்றிவிடும் நம் மனித இனம்.
“ இயற்கை என்னும் வரம்,மனிதன் என்னும் சாபத்தின் விளைவால் அனுதினமும் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த மனித இனத்துக்கு புரிவதில்லை, இந்த இயற்கை இருக்கும் வரையில் தான் இங்கு மனித இனமும் இருக்கும் என்பது “