’காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!
Social Media Ask To Vivek Agnihotri Direct Manipur Files Idamporul
மணிப்பூர் விவகாரத்தை சுட்டி காட்டி, காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் இயக்குநரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஒருசாரரை மட்டும் குற்றவாளியாக நிறுத்தி, இன்னொரு சாரரை உயர்த்தி காட்டி காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை எடுத்த விவேக் அக்னிஹோத்ரிக்கு, மணிப்பூர் பைல்ஸ் என்று ஒரு படத்தை எடுக்க திராணி இருக்கிறதா?, என நெட்டிசன்கள் இணையம் முழுக்க அவரை டாக் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர்.
“ அவர்கள் கேட்பதும் நியாயம் தான், ஆளும் கட்சியின் ஆதரவை பெற ஒரு சில சினிமா யுக்திகளை இன்றைய இயக்குநர்கள் படங்களை அரசியல் ரீதியாக எடுக்கின்றனர், அது ஒரு சாரரை புண்படுத்தும் என்ற எண்ணம் கூட இல்லாமல், என இன்னும் சில இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் “