தமிழகத்தில் தடுப்பூசி உபயோகத்தில் நீலகிரி மாவட்டம் முதலிடம்!
தமிழகத்தில், தகுதியுள்ள வயதினருக்கு தடுப்பூசி செலுத்தியதில் நீலகிரி மாவட்டம் மற்ற எல்லா மாவட்டங்களையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை வகிக்கிறது.
ஓட்டு மொத்த தமிழகத்தை பொறுத்தவரை, தடுப்பூசிக்கு தகுதியுள்ள வயதினர்களுள் 46 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களுள் 12 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். மாவட்ட வாரியாக பார்த்தால் நீலகிரி மாவட்டம் தகுதியான வயதினர்களுள் 71 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி மாநிலத்தில் முதலிடம் வகிக்கிறது.
மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு இன்று தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் தமிழகத்தில் 10,000 சென்டர்கள், 40,000 பூத்கள் அமைத்து 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக நிர்ணயித்திருக்கும் இத்திட்டம் இன்று தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்பட்டும் வருகிறது. இதற்காக 27 லட்சம் தடுப்பூசிகள் இன்று ஒரு நாளுக்கு மட்டும் தமிழகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
“ கொரோனோ செயல்பாடுகளை பொறுத்தவரை இரண்டாவது அலையில் கிடைத்த அனுபவத்தை வைத்து தமிழக அரசு சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. தடுப்பூசி செயல்பாடுகளிலும் கொரோனோ செயல்பாடுகளிலும் சரி திறம்பட செயல்பட்டு வரும் தமிழக அரசிற்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் “