மீண்டும் வருகிறதா உயிர்க்கொல்லி வைரஸ் என அறியப்படும் நிபா வைரஸ்?

கேரளத்தில் கடந்த ஞாயிறு அன்று உடல் நிலை குன்றி இறந்து போன 12 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாக கேரள சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.

பன்றிகள் மற்றும் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பரவும் இந்த நிபா வைரஸ் 2018-ற்கு பிறகு மறுபடியும் கேரளாவில் பதிவாகி இருப்பது அம்மாநில அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பதிவாகும் ஒட்டு மொத்த கொரோனோ தொற்றில் 60 சதவிகிதத்திற்கும் மேல் கேரளாவைச் சார்ந்தது என்றிருக்கும் நிலையில், நிபா வைரஸ் அறிகுறியுடன் 12 வயது சிறுவன் கேரளாவில் இறந்திருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது.

நிபா வைரஸ் முதன் முதலில் 1998-ஆம் ஆண்டு மலேசியாவில் கண்டறியப்பட்டது. அதற்குப்பின் இந்தியா உட்பட உலகின் பல்வேறு இடங்களிலும் அந்த வைரசின் தாக்கம் பதிவு செய்யப்பட்டது. இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வவ்வால்கள் கடித்த பழம், எச்சம், வவ்வால்களின் கழிவுகள் மூலம் பரவக்கூடியது. இது காய்ச்சல், தலைவலி, மூளைச்சோர்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்த வல்லது. இது கிட்ட தட்ட 68 சதவிகிதம் அளவிற்கு இறப்பை ஏற்படுத்தக்கூடியது. இது மலேசியாவில் வேரூன்றிய போது பாதிக்கப்பட்ட 265 பேர்களுள் 105 பேரின் உயிரை காவு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இன்றளவும் நிபா வைரஸ்சிற்கான தடுப்பூசிகளும் எதிர்ப்பு பொருள்களும் கண்டறியப்படவில்லை. மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் இவை மட்டுமே நிபா வைரஸ்சிலிருந்து ஒருவர் தன்னை தற்காத்துக்கொள்ள மூலதனமாக அறியப்படுகிறது. கொரோனோவை பரவும் வேகம் குறைவு ஆனால் உயிரைக்கொல்லும் விகிதம் அதிகம்.

“ கண்ணுக்கு தெரியாத கிருமிகள், உலகத்தின் ஒட்டு மொத்த மக்களிடமும் போர் புரிந்து உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. தற்காத்துக்கொள்வதை விட வேறு வழிகள் எதுவும் இருப்பதாய் புலன்படவில்லை. தற்காத்துக்கொள்ளுங்கள், பரவலையாவது தடுத்திடுங்கள் “

About Author