இனி பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி அவசியம் – தமிழக வேளாண் துறை
தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை, அமைச்சர் MRK பன்னீர் செல்வம் வாயிலாக தாக்கல் செய்யப்பட்டது. பனை மரங்கள் பற்றிய பிரிவில் அமைச்சர் பன்னீர் செல்வம் கூறுகையில் இனி ரேசன் கடைகளில் பனைவெல்லம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாலையோரங்களில் இருக்கும் பனை மரங்களை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி அவசியம் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் வேளாண் துறை, வேளாண்மை-உழவர் துறை என்று பெயர் மாற்றப்பட்டு அழைக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கை உரையில் அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். பனை மரங்களை காக்கும் பொருட்டு அனைத்து தமிழக மாவட்டங்களிலும் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனை விதைகளும் முழு மானியத்தில் விநியோகம் செய்யப்படும் என்றும் தனது சட்டமன்ற உரையில் அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
“ அழிந்து வரும் பனை என்பது கவனிக்கபட வேண்டிய ஒன்றாகவே இருந்தது. இன்று பனை மேம்பாட்டு இயக்கத்தை செயல்படுத்த சட்ட மன்றத்தில் மூன்று கோடி வேளாண்துறை சார்பில் தனியாக ஒதுக்கி இருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது “