தலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் பஞ்சஷேர் மாகாணம்!

அமெரிக்க படைகள் வெளியேறிய ஏழு நாட்களுக்குள் தலிபான்கள் வரிந்து கட்டி அனைத்து மாகாணத்தையும் கைப்பற்றிய போதும் ஒரு மாகாணம் மட்டும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறது. அது தான் பஞ்சஷேர் மாகாணம்.

ஆப்கானிஸ்தானின் அனைத்து மாகாணங்களும் தலிபான்களுக்கு அடிபணிந்து விட்ட நிலையில் பஞ்சஷேர் எனப்படும் ஒரு மாகாணம் மட்டும் தலிபான்களை சிங்கம் போல எதிர்த்து நிற்கிறது. தன் பேரிலேயே ஐந்து சிங்கங்களைக் கொண்டிருக்கும் பஞ்சஷேர் மாகாணம் இதுவரை எந்த போருக்கும் அடிபணிந்தது இல்லை. 70,80 களில் சோவியத் யூனியன் படைகள் படையெடுத்து வந்த போதும் 90-களில் தலிபான்கள் ஆட்சி அமைத்திருந்த போதும் அடிபணியாது தனக்கே உரிய தீரத்துடன் எதிர்த்து தனியாக நின்றது பஞ்சஷேர். தற்போது நடந்த தலிபான்கள் ஆக்கிரமிப்பிலும் தன் நிலத்தை விட்டுக்கொடுக்காமல் இன்றளவும் தலிபான்களுக்கு எதிராகத்தான் நிற்கிறது பஞ்சஷேர்.

அதிபர் அஷ்ரப் கனி ஆப்கனை விட்டே வெளியேறிய நிலையில், துணை அதிபர் அமருல்லாவோ தலிபான்களிடம் நாட்டை ஒப்படைக்க மனமில்லாமல் பஞ்சஷேர் மாகாணத்தில் தங்கி தலிபான்களுக்கு எதிராக படைகளை திரட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அன்றைய தலிபான் படைகளுக்கு எதிராக வலிமையான படையாக திகழ்ந்த வடக்கு கூட்டணி எனப்படும் படைகளின் தலைவரான அகமது ஷாவுடன் இணைந்து துணை அதிபர் அமருல்லா தலிபான்களுக்கு எதிராக படைகளை திரட்ட முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

“ அன்றைய தலிபான்களை வடக்கு கூட்டணி ஓட ஓட விரட்டி அடித்திருந்தாலும், இன்று தலிபான்களுக்கு இருக்கும் பலத்தை குறைத்தும் மதிப்பிட்டு விட முடியாது. அது போல அமருல்லாவுடன் இணைந்திருக்கும் அகமது ஷா மசூத்-தின் படைதிறனையும் குறைத்து மதிப்பிட முடியாது, எதுவாகினும் போர் என்னும் தீரத்திலேயே முடிவு தெரியும் “

About Author