’பிசாசு-2’ படத்தின் ‘உச்சந்தல ரேகையிலே’ பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது!
Pisasu 2 Uchanthala Regaiyile Song Released In Net
இயக்குநர் மிஸ்கின் அவர்களின் ‘பிசாசு-2’ திரைப்படத்தின் ‘உச்சந்தல ரேகையில’ எனப்படும் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குநர் மிஸ்கின் அவர்களின் இயக்கத்தில், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்தில், கபிலன் அவர்கள் எழுதி, கார்த்திக் ராஜா அவர்கள் இசையமைத்துள்ள ‘உச்சந்தல ரேகையில’ என்னும் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குநர் மிஷ்கின் அவர்களின் படத்திற்கென தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதும் இருக்கும். அஞ்சாதே, துப்பறிவாளன், பிசாசு என்று அவரை விட அவர் கொடுத்த ஹிட் அதிகமாய் பேசும்.
“ பிசாசு திரைப்படத்தில் பேய்களை கூட தேவதையாக காமித்திருக்கும் மிஸ்கின் அவர்கள் பிசாசு-2 திரைப்படத்தில் என்ன செய்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். பாடலை பொறுத்தவரை அருமையாக வந்திருக்கிறது. இசையோடு வரிகள் சேர்ந்து இதயத்தை பிய்க்கிறது என்றே சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு அருமை “