பிளாஸ்டிக் சர்ஜெரி பாதுகாப்பானதா? ஆபத்தானதா?
பிளாஸ்டிக் சர்ஜெரி குறித்த வதந்திகள் அவ்வப்போது பரவி வருவதால் அது பாதுகாப்பானதா ஆபத்தானதா என்பது குறித்து பார்க்கலாம்.
உடல் சீரமைப்பு, முக சீரமைப்பிற்காக தகுந்த மருத்துவர்கள் மூலம் எல்லா உடற்சோதனைகளும் செய்து கொண்டு செயல்படுத்தப்படும் போது பிளாஸ்டிக் சர்ஜெரி பாதுகாப்பானது தான். ஆனாலும் சர்ஜெரியின் போது செலுத்தப்படும் மருந்து ஒவ்வாமையால் ஒரு சிலருக்கு பாதிப்புகளும் இருக்க தான் செய்கிறது.
அழகிற்காக மட்டும் பிளாஸ்டிக் சர்ஜெரிகள் செய்யப்படுவதில்லை. விபத்தினால் உடல் சீரற்றவர்களுக்கும் செய்யப்படுகிறது. நார்மலான சர்ஜெரிகள் போல இதிலும் ரிஸ்க் இருக்க தான் செய்கிறது. ரிஸ்க்கை கடந்து அழகு பெற நினைப்பவர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வாறு செய்து கொண்டு அழகு பெற்றவர்களும் இருக்கிறார்கள். பாதிப்படைந்தவர்களும் இருக்கிறார்கள்.
“ எதுவாக இருந்தாலும் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வாமை என்று ஒன்று ஏற்பட்டால் தகுந்த மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான் “