14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசே விடுவிக்கலாம் – உச்சநீதிமன்றம்

14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சிறைக்கைதிகளை குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு, 433ஏ பிரிவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது, அதே சமயம் 14 ஆண்டுகள் தண்டனை முழுமை பெறாத கைதிகளை கருணையின் அடிப்படையிலோ அல்லது முன்கூட்டியோ விடுவிக்க  வேண்டுமெனில் ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் தான் விடுவிக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

அதே சமயம் தூக்கு தண்டனை கைதிகளை 14 ஆண்டுகள் தண்டனைக்காலம் முடியாமல் விடுவிக்க கூடாது என்றும் நீதிபதி ஹேமந்த் குப்தா அமர்வு தங்களது அறிக்கையினில் தெரிவித்துள்ளனர்.

“ இனியாவது பேரரறிவாளன் உள்ளிட்ட அந்த ஏழு பேரை விடுதலை செய்யுமா இந்த மாநில அரசு, இல்லை இனியும் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதங்கள் மட்டும் தான் இடுமா…? என்பதே இன்றைய நிலையில் தமிழக ஆர்வலர்கள் பலரின் கேள்வியாக இருக்கிறது “

About Author