’மோடி ‘’டீ விற்றார்’’ என்பதை நம்பியவர்கள், தற்போது ’’நாட்டையே விற்கிறார்’’ என்றால் நம்ப மறுக்கிறார்கள்’ – பிரகாஷ் ராஜ்
Actor Prakash Raj About Narendra Modi
நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஒரு காட்டமான எதிர்வினையை வைத்து இருக்கிறார்.
ஒரு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டீ விற்றார் என்ற கூற்றை இந்த சமூகமே சேர்ந்து நம்பியது. ஆனால் தற்போது நாட்டையே விற்கிறார் என்று கூறினால் நம்ப மறுக்கிறார்கள். அது தானே உண்மை, அது தானே இயல்பு என்று மோடி குறித்து ஒரு காட்டமான எதிர்வினையை காட்டி இருக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
“ ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்தி மக்களிடம் காண்பித்தே மோடி அவர்களை தூக்கி பிடிப்பதாக பலரும் தற்போது மோடிக்கு எதிராக எதிர்வினையை ஆற்றி வருகின்றனர். ஹ்ம் மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை வரும் தேர்தலில் பார்ப்போம் “