அரசியலில் தீவிரமாக களம் இறங்கும் நடிகர் விஜய்?
Actor Vijay Fasten His Process For Politics Idamporul
நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் தீவிரமாக களம் இறங்க இருப்பதாக ஒரு பக்கம் ஒரு பொறி கிளம்பி இருக்கிறது.
இளைஞர்களை கவரும் வகையில் முதற்கட்டமாக பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக சந்திக்க இருக்கிறார் நடிகர் விஜய். அடுத்தடுத்து பட அறிவிப்புகள் வர இருக்கிறதோ இல்லையோ இனி அடிக்கடி விஜய் தரப்பிடம் இருந்து அரசியல் அறிவிப்புகள் வர இருக்கிறதாம்.
“ நடிகர் விஜய் அவர்களின் அரசியல் அறிவிப்பு வரும் போதெல்லாம் ஏதாவது பிரச்சினைகளை கிளப்பி அவரை ஆஃப் செய்வது வழக்கம், இந்த முறை என்ன பிரச்சினை வந்தாலும் விஜய் தரப்பு சமாளிக்க தயாராக இருக்கிறதாம் “