இனி சினிமாவிற்கு முழுக்கு, அரசியலில் மட்டுமே தீவிரம், கட்சியை துவங்கினார் விஜய்!
Actor Vijay Launched Political Party Soon Stop Actin Career Fact Here Idamporul
நடிகர் விஜய் அவர்கள் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் உதவியுடன், புதிய கட்சி ஒன்றை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறார்.
நடிகர் விஜய் அவர்களின் அரசியல் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றாக இருந்த நிலையில், தற்போது ’தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை துவங்கி இருக்கிறார். இனி முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபட போவதாகவும், கமிட் ஆன ஒரு சில படங்களை மட்டும் நடித்துக் கொடுத்து விட்டு நடிப்பில் இருந்து விலக போவதாகவும் நடிகர் விஜய் அறிவித்து இருக்கிறார்.
கட்சி ஆரம்பிக்கும் சூட்டில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை நடிகர் விஜய் எதிர்கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பங்கேற்க போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவும் இல்லை என்பதை நடிகர் விஜய் தெள்ள தெளிவாக தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.
“ நடிகர் விஜய் அவர்களை போற்றிக் கொண்டாடிய தமிழக ரசிகர்கள் கூட்டம், தலைவர் விஜய் என்ற அவதாரத்தையும் ரசிப்பார்களா, கொண்டாடுவார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “