வரும் பாராளுமன்ற தேர்தலில் இருந்து தீவிர அரசியல் களம் காண்கிறாரா நடிகர் விஜய்?
Actor Vijay Entering In To Political From Coming Parliment Election Fact Here Idamporul
வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதற்கு பின்னர் நடிகர் விஜய் அரசியல் களத்தில் தீவிரம் காட்ட முனைவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது.
நடிகர் விஜய் அவர்களின் தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல்களில் சிறப்பான முடிவுகளை கொடுத்த நிலையில், இயக்கத்தின் மூலம் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், விஜய் தொடர்ந்து மக்களுக்கு செய்து வருகிறார். இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தல் முதல், விஜய் மக்கள் இயக்கத்தின் உதவியுடன் தீவிர அரசியலில், நடிகர் விஜய் களம் இறங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது.
“ இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் தரப்பில் விசாரித்த போது, ஆம் இருக்கலாம் என்ற பதில் கிடைத்து இருக்கிறது, அரசியல் முடிவுகள் குறித்து உறுதியாக ஒரு முடிவெடுக்க வெகுவிரைவில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒரு கூட்டம் ஒன்றை நடத்தவும் நடிகர் விஜய் முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல் கசிந்து இருக்கிறது “