சில காலம் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு நடிகர் விஜய் முழுக்க முழுக்க அரசியலில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தளபதி 68 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சில காலம் நடிப்பிற்கு முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2026-யில் நடக்கும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து களத்தில் இறங்கி ரசிகர்களுடன் பிரச்சாரம் வேலைகளையும், சமூக சேவைகளையும் செய்து மக்களை தன்பக்கம் திரட்ட முடிவெடுத்து இருக்கிறாராம்.
“ நடிகர் விஜய் அவர்களின் இந்த முடிவிற்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்தாலும் கூட, அரசியலில் ஒரு சிலர் கடுமையாக எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர் “