அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் ஈ.பி.எஸ், ஆதரவாளர்களை திரட்டும் ஓ.பிஎஸ்!
Fight For Occuring ADMK Between EPS And OPS
ஈ.பி.எஸ் அவர்கள் ஓ.பி.எஸ் அவர்களை ஒதுக்கி விட்டு அதிமுகவை கைப்பற்ற நினைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பொதுமேடைகளில் தற்போதெல்லாம் ஓ.பி.எஸ் அவர்களை ஈ.பி.எஸ் புறக்கணித்து வருவதாகவும், ஒற்றை தலைமையோடு அதிமுகவை ஈ.பி.எஸ் கைப்பற்ற நினைப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது அறிந்த ஒ.பி.எஸ் ஒரு பக்கம் தன்னை நிலை நிறுத்த ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்.
23 ஆம் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழுவில் ஒரு பக்கம் ஈ.பி.எஸ் அவர்கள் ஓ.பி.எஸ்சை பல்வேறு முறைகளில் நிராகரித்து வருகிறார். இன்னொரு பக்கம் தனக்கான ஆதரவாளர்களை திரட்டி பொதுக்குழுவில் தன் ஆதரவை காட்ட ஓ.பி.எஸ் முனைந்து வருகிறார்.
“ ஒற்றை தலைமையை வலியுறுத்து பல்வேறு மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து கரகோஷம் எழுப்பி வரும் நிலையில், இந்த இரு தலைமைகளின் மோதல் கட்சியை எங்கு கொண்டு நிறுத்த போகிறது என்பது தெரியவில்லை “