மெல்ல மெல்ல உடைகிறதா அதிமுக? பாஜகவில் இணைந்த அதிமுகவின் 14 முன்னாள் எம் எல் ஏக்கள்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அஇஅதிமுகவின் 14 முன்னாள் எம் எல் ஏக்கள் பாஜகவில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வ.எண் | பெயர் | கட்சி | தொகுதி |
1 | K வடிவேல் | அதிமுக | கரூர் |
2 | துரைசாமி | அதிமுக | கோயம்புத்தூர் |
3 | P S கந்தசாமி | அதிமுக | அரவக்குறிச்சி |
4 | M V ரத்தினம் | அதிமுக | பொள்ளாச்சி |
5 | R சின்னசாமி | அதிமுக | சிங்காநல்லூர் |
6 | கோமதி ஸ்ரீனிவாசன் | அதிமுக | வலங்கைமான் |
7 | V R ஜெயராமன் | அதிமுக | தேனி |
8 | S M வாசன் | அதிமுக | வேடசந்தூர் |
9 | P S அருள் | அதிமுக | புவனகிரி |
10 | R ராஜேந்திரன் | அதிமுக | காட்டுமன்னார் கோவில் |
11 | செல்வி முருகேசன் | அதிமுக | காங்கேயம் |
12 | A ரோகிணி | அதிமுக | கொளத்தூர் |
13 | S E வெங்கடாசலம் | அதிமுக | சேலம் |
14 | முத்து கிருஷ்ணன் | அதிமுக | கன்னியாகுமரி |
அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த 14 முன்னாள் எம் எல் ஏக்கள்
இவர்கள் அனைவரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில், மத்திய அமைச்சர்கள் ராஜிவ் சந்திரசேகர் மற்றும் எல் முருகன் அவர்களின் முன்னிலையில், அதிமுகவில் இருந்து விலகி விட்டு அதிகாரப்பூர்வமாக பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கின்றனர்.
“ ஜெயலலலிதா என்ற தலைமையை இழந்த பின், அதிமுக பல கூறுகளாக பிரிந்தது. தற்போது கண்ணாடி உடைவது போல சில்லு சில்லுகளாக உடைந்து கொண்டு இருக்கிறது “