அதிமுகவின் கொடி மற்றும் சின்னங்களை உபயோகிக்க ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் – சென்னை உயர் நீதிமன்றம்
அதிமுகவின் கொடி மற்றும் சின்னங்களை உபயோகிக்க ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டு இருக்கிறது.
அதிமுக கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டும் கூட ஓ பன்னீர் செல்வம் அவர்கள் தொடர்ந்து கட்சி கொடி, சின்னம், லெட்டர் பேடு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வந்தார். இதனை எதிர்த்து அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தனிநீதிபதி சதீஷ் குமார் அவர்கள், ஓபிஎஸ் அவர்கள் அதிமுகவின் கொடி, சின்னம் உள்ளிட்டவைகளை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தார்.
தனிநீதிபதி விதித்த இந்த இடைக்கால தடையை எதிர்த்து மீண்டும் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அடங்கிய குழு ஓபிஎஸ் அவர்களுக்கு தனி நீதிபதியால் விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என தீர்ப்பளித்து இருக்கிறது.
“ நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்ந்து தனக்கு சாதகமாக அமையாததால் ஓபிஎஸ் எடப்பாடிக்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது “