’இனி என் வழி, தனி வழி’ கூட்டணியை உடைத்து எறியும் அண்ணாமலை!
BJP Leader Annamalai New Decison Idamporul
திராவிட கட்சிகளுடன் கூட்டணியை உடைத்து விட்டு தமிழகத்தில் தனித்து போட்டியிட தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒட்டு மொத்தமாக திராவிட கட்சிகளுடன் கூட்டணிகளை உடைத்து விட்டு இனி வரும் ஒவ்வொரு எலெக்சனிலும் தனித்து போட்டியிட, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது சம்மந்தமாக பிரதமர் மோடியை சந்திக்கவும் அண்ணாமலை திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்து இருக்கிறது.
“ இனி என் வழி, தனி வழி என்று விஸ்வரூபம் எடுத்து வரும் அண்ணாமலையின் முடிவை பிஜேபி கட்சியனரும் தொண்டர்கள் பலரும் ஆதரித்து வருகின்றனர் “