’என் மனைவி ஜெயலலிதாவை விட பல மடங்கு பலமானவர்’ – அண்ணாமலை
Annamalai Controversial Speech Idamporul
என் மனைவி ஜெயலலிதாவை விட பல மடங்கு பலமானவர் என்று அண்ணாமலை கருத்து கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே எம்ஜிஆர், ஜெயலலிதாவை தன்னுடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கி கொண்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தற்போது தன்னுடைய மனைவி ஜெயலலிதாவை விட பல மடங்கு பலமானவர் என்று கூறி சர்ச்சையை இன்னும் பெரிது ஆக்கி இருக்கிறார். இதனால் அதிமுக – பாஜக இடையே பெரும் கருத்து மோதல் நிலவி வருகிறது.
“ ஒரு பக்கம் பாஜக நிர்வாகிகள் ஒவ்வொருவராக அதிமுகவில் இணைந்து கொண்டு இருக்கின்றனர். இன்னொரு பக்கம் அதிமுக – பாஜக இடையே கருத்து மோதல், இதனால் இரு பெரும் கூட்டணி கட்சிகளிடையே விரிசல் ஏற்பட்டு இருக்கிறது “