ஓபிஎஸ் இல்லத்தில் முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின்!
Stalin And Udhay Meet OPS Idamporul
ஓபிஎஸ் அவர்களின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக முதல்வர் மற்றும் உதயநிதிஸ்டாலின் நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் வார்த்தை கூறினர்.
சமீபத்தில் மறைந்த ஓ பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள ஓ பன்னீர் செல்வம் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் வார்த்தை கூறி வந்தனர்.
“ இருவரும் நேரில் சென்ற போது அங்கு இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இருவரையும் தளபதி, இளைய தளபதி என்று கூறி அன்போடு வரவேற்றது அரசியலில் ஒரு நட்பு சூழலை உருவாக்கி இருக்கிறது “