இந்திய அரசமைப்பு சட்டம் உருவானது எப்படி? அதன் உருவாக்க பின்னனியில் இருந்தவர்கள் யார் யார்?

Indian Constitution How Its Build Details Here Idamporul

Indian Constitution How Its Build Details Here Idamporul

இந்திய அரசமைப்பு சட்டம் எப்படி உருவானது, அதன் உருவாக்கத்தில் இருந்த முக்கிய நபர்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

இந்திய அரசமைப்பு சட்டம்

இந்திய அரசமைப்பு சட்டம் என்பது குடியரசு நாடான இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள், கடமைகள், விதிமுறைகள் பற்றியதாகவும் மற்றும் ஆளும் ஆட்சியாளர்களின் அதிகார எல்லையை வகுப்பதாகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு சட்ட சாசனம் ஆகும்.

இந்திய அரசியல் நிர்ணயசபை

1946 ஆண்டு காலக்கட்டத்தில், இந்திய அரசமைப்பு சட்டத்தை கட்டமைப்பதற்காக இராஜேந்திர பிரசாத் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் அரசியல் நிர்ணய சபை. இவ்வமைப்பில் பல மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் 389 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 15 பெண் தலைவர்களும் உள்ளடக்கம்.

வரைவுக் குழு

அரசியல் நிர்ணய சபையின் கீழ் 7 பேர் கொண்ட ஒரு வரைவுக் குழு வகுக்கப்பட்டது. அந்த வரைவுக் குழுவில், டாக்டர் அம்பேத்கர், என் கோபால சாமி, என் மாதவராவ், கே எம் முன்ஷி, சையது முகமது சாதுல்லா, டி டி கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வரைவுக்குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கரும், ஆலோசகராக பி என் ராவ் அவர்களும் நியமிக்கப்பட்டனர்.

அரசமைப்பு சட்டங்கள் உருவாக்கம்

இந்த வரைவுக்குழு முதலாவதாக டிசம்பர் 9, 1946 அன்று கூடியது. அன்றில் இருந்தே சாசனம் எழுத ஆரம்பிக்கப்பட்டு விட்டாகிற்று. அமெரிக்கா, பிரான்ஸ், சோவியத் ரஷ்யா உள்ளிட்ட 60 நாடுகளுக்கும் மேற்பட்ட அரசியல் சாசனங்களை ஆராய்ந்து இந்தியா என்னும் தேசத்தின் பன்முகத்தன்மைக்கு ஏற்றவாறு இந்த வரைவுக் குழு சட்டங்களை வகுக்க ஆரம்பித்தது. கிட்டதட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திருத்தங்களுடன், 2 வருடங்கள் 11 மாதங்கள், 18 நாட்களுக்கு பிறகு இந்திய அரசியலைப்பை கொண்ட ஒரு பிரகடனம் அரசியல் நிர்ணசபையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு இந்த அரசியலமைப்பு சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த தினத்தை நினைவு கொள்ளும் வகையில் ஒவ்வொரு வருடமும் இத்தினம் அரசியலமைப்பு நாளாக கொண்டாடப்படுகிறது.

சமர்ப்பணம்

வரைவுக்குழுவால் உருவாக்கப்பட்ட இந்த இந்திய அரசியலமைப்பு, ஜனவரி 26, 1950 அன்று இந்திய மக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு தேசத்தில் அமலுக்கும் வந்தது. இந்த தினத்தை தான் நாம் ஒவ்வொரு வருடமும் இந்திய குடியரசு தினமாக அனுசரித்து வருகிறோம். இந்திய அரசியலமைப்பு அந்த சமயத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாக்கப்பட்டு இருந்தது. அது உருவாக்கப்பட்ட போது அதன் கீழ் 395 உறுப்புகள், 22 பகுதிகள், 8 அட்டவணைகள் இருந்தன. தற்போது 2021 வரை இந்த அரசியலமைப்பில் 105 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

ஒரு நாட்டின் கட்டமைப்பு என்பதே அதன் அரசியல் சட்டங்கள் தான், அதை உருவாக்குவதற்காக நிறைய தலைவர்கள் இணைந்து அரும்பாடு பட்டு இருக்கின்றனர், ஆனால் அதற்கான மதிப்பு என்பது இன்றளவில் எள் அளவு கூட இல்லை என்பது தான் உண்மை. இறையாண்மை என்பது மக்கள் கையில் இருக்கும் பெரும் அதிகாரம் என்றாலும் கூட, ஆளும் சிலர் தங்களுக்குரிய அதிகாரத்தை வைத்துக் கொண்டு சட்டங்களை தங்களுக்கு ஏற்றார் போல திருத்திக் கொள்கின்றனர்.

“ பன்முகத்தன்மைக்கான மதிப்பு என்பது இந்தியாவில் குறைந்து வருவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எழுதப்பட்ட அரசியல் சட்டங்களை ஹீலியம் வாயு நிரப்பி நாடாளுமன்ற நூலகத்தில் பத்திரமாய், பாதுகாப்பது என்பது மட்டும் முக்கியம் ஆகாது, எழுதப்பட்டு இருப்பவற்றை தேசத்திலும் நிலை நிறுத்தி தேசத்தின் பன்முகத் தன்மையையும், சுதந்திரத்தையும், பாதுகாப்பினையும் உறுதி செய்ய வேண்டும் “

About Author