நாங்குநேரி விவகாரமா? அப்படின்னா? செய்தியாளர்கள் சந்திப்பில் யோசித்த எடப்பாடி பழனிச்சாமி!
Edappadi Not Known About Naguneri Casteist Matter Idamporul
செய்தியாளர்கள் நாங்குநேரி விவகாரம் குறித்து எடப்பாடி அவர்களிடம் கேட்டபோது சற்றே யோசித்து எதுவும் புலப்படாதவராய் நின்றது வைரலாகி வருகிறது.
நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவருக்கு நடந்த சாதியிய வன்முறை தமிழகத்திற்கே தெரிந்து இருக்கும் நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி, நாங்குநேரி விவகாரம் குறித்து கேட்ட போது, ’நாங்குநேரி விவகாரமா, அப்படின்னா?’ என கேட்டு திருதிருவென முழித்தது வைரலாகி வருகிறது.
“ தமிழகமே ஒரு விவகாரம் குறித்து சூடாக பேசி வரும் நிலையில், ஒரு எதிர்கட்சி தலைவருக்கு அந்த விவகாரம் பற்றி தெரியாதா?, என இணையதளவாசிகள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர் “