எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக பொதுச்செயலாளர் அங்கீகாரம் வழங்கியது எலெக்சன் கமிஷன்!
Edappadi Palanisamy Approved As General Secretary By Election Commission Idamporul
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கீகாரம் வழங்கியது எலெக்சன் கமிஷன்.
கட்சியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எலெக்சன் கமிஷன் அங்கீகாரம் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழக்கு தொடுத்து இருந்தார். நீதிமன்றம் விசாரித்து தேர்தல் ஆணையத்திற்கு முடிவெடுக்க 10 நாள் கெடு விதித்திருந்த நிலையில் எடப்பாடிக்கு அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளர் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது தேர்தல் ஆணையம்.
“ அதிமுக கட்சியில் நீண்ட நாட்களாக செயல்பட்டு வந்த ஒரு குழப்பம் நீதிமன்றத்தால் தற்போது தீர்க்கப்பட்டு விட்டாலும், கட்சியில் இன்னமும் குழப்பம் நீடிப்பதாகவே தொண்டர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர் “