ஆம் ஆத்மி சாதனை, கட்சி ஆரம்பித்த 10 வருடங்களுக்குள் இரண்டு மாநிலங்களில் ஆட்சி!
Arvind Kejriwal Punjab Election
கட்சி ஆரம்பித்த 10 வருடங்களுக்குள் இரண்டு மாநிலங்களில் ஆட்சி என்ற சாதனையை நிகழ்த்தி இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, ஆரம்பித்த ஒரு வருடங்களுக்குள் டெல்லியை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பஞ்சாபிலும் பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது. 10 வருடத்திற்குள் இரண்டு மாநிலங்களை தன்வசப்படுத்தி இருக்கிறது ஆம் ஆத்மி.
“ தற்போது இருக்கும் சூழலில் ஒட்டு மொத்த இந்தியாவிலும் எந்த ஒரு கட்சியும் இரு மாநிலங்களை தன் வசம் வைத்து இருக்காத நிலையில், ஆம் ஆத்மி தற்போது டெல்லி, பஞ்சாப் என்று இரண்டு ஆட்சிப்பகுதிகளை தன் வசம் வைத்து இருக்கிறது “