அ.இ.அ.தி.மு.க பிளவு என்பது யாருக்கு சாதகமாக அமையும்?
அ.இ.அ.தி,மு.க பிளவு என்பது தொண்டர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்து இருக்கிறது. ஆனால் இதில் சாதகம் என்று பார்த்தால் எதுவும் இல்லை. பாதகம் மட்டுமே இருக்கிறது.
ஒரு பக்கம் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ் நீக்கம் என்று அ.இ.அ.தி.மு.க இரண்டாக பிளவுற்று இருப்பது, அவர்களுக்கு எந்த வகையிலும் சாதகம் இல்லை. இது ஆளுங்கட்சியான தி.மு.கவிற்கே சாதகமான சூழலாக அமையும்.
“ இது பல்முனை போட்டியாக அமையும், நாளை ஓட்டுக்கள் பிரியும், தற்போது ஒற்றுமையுடன் மெஜாரிட்டி இடத்தில் இருப்பது தி.மு.க தான் என்னும் போது நாளை தேர்தல் வந்தால் அது முழுக்க முழுக்க அவர்களுக்கே சாதகமான சூழலை அமைத்துக் கொடுக்கும் “