ட்விட்டரில் ட்ரெண்டாகும் விவசாயிகளின் பாரத்பந்த் ஹேஸ்டாக்!
வேளாண் சட்டதிருத்த மசோதோவிற்கு எதிரான விவசாயிகளின் பாரத்பந்த் குறித்த ஹேஸ்டாக் ஒன்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
9 மாதங்களுக்கும் மேலாக, 600க்கும் மேற்பட்ட விவசாயிகளை பலி கொடுத்து, ஏகப்பட்ட தடியடிகளையும் வாங்கி கொண்டு, மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக இன்னமும் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் வருகின்ற செப்டம்பர் 27 அன்று மிகப்பெரிய பாரத்பந்தையும் விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது #27Sept_BharatBandhWithFarmers ஹேஷ்டாக்.
“ ஒரு சட்டம் ஒரு கார்பரேட்டுகளுக்கு எதிராக இயற்றப்படும் போது மட்டும் அவர்களைத்தேடி சென்று கருத்து கேட்கும் அரசுகள், ஏன் விவசாயிகளுக்கு எதிராக ஒரு சட்டம் இயற்றப்படும் போது இந்த விவசாயிகளிடம் கருத்து கேட்பதில்லை என்பது சமூக ஆர்வலர்கள் பலரின் கேள்வியாக இருக்கிறது “