2026 யில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என அண்ணாமலை அறிவித்து இருப்பது சாத்தியமா?
Government Job For Each Family Says Annamalai Is It Possible Idamporul
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், தமிழகத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என அண்ணாமலை அறிவித்து இருப்பது சாத்தியமா என்ற கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 9 கோடி என எடுத்துக் கொள்வோம். ஒரு குடும்பத்திற்கு 4 பேர் என கொண்டால், தோராயமாக ஒரு 2 கோடி பேருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டி இருக்கும். தமிழகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த அரசு வேலைகள் 15 முதல் 20 இலட்சங்களில் இருக்கும் போது, எப்படி 2 கோடி பேருக்கு அரசு வேலை கொடுக்க முடியும் என பலரும் அண்ணாமலையின் வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“ தேர்தல் என்றாலே கவர்ச்சிகர அறிவிப்புகள் எப்போதுமே இருக்கும், ஆனாலும் கொஞ்சம் கூட டேட்டாக்களை புரட்டி பார்க்காமல் வெற்று அறிவிப்புகள் கொடுத்து விட்டு ஒரு சில அரசியல்வாதிகள் சிக்கி கொள்கின்றனர் “