இதெல்லாம் அரசியலுக்காக தான் என்றால், இருந்து விட்டு போகட்டுமே அதனால் தான் என்ன?
மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா எல்லாம் நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்காக தான் செய்கிறார் என்றால், இருந்து விட்டு போகட்டுமே அதனால் தான் என்ன? என்பதே இங்கு பலரின் விவாதமாக இருக்கிறது.
ஒரு மனிதன் காலை 11 மணிக்கு அரங்கத்திற்கு வந்து, சாப்பிட கூட நேரமில்லாமல், மேடையில் தனக்கென்று ஒரு சொகுசு இருக்கை ஏதும் அமைக்காமல், கிட்ட தட்ட 12 மணி நேரம் நின்று கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் தன் கையாலே பரிசுகளை கொடுத்து விட்டு சிறுது கூட முகம் சுளிக்காமல் அவர்கள் செய்யும் அனைத்திற்கும் இசைந்து கொடுத்த நடிகர் விஜய், இதையெல்லாம் அரசியலுக்காக தான் செய்கிறார் என்றால் இருந்து விட்டு போகட்டுமே அதனால் தான் என்ன?
அங்கு வந்த அனைவருக்கும் தேவையானவைகளை செய்து, உணவு கொடுத்து, தங்க இடம் கொடுத்து, ட்ராவல் வசதிகளும் செய்து கொடுத்து, ஒரிரு பேருக்கு மட்டும் பரிசுகள் கொடுத்தது போல போஸ் கொடுத்து விட்டு கிளம்பி விடாமல், அங்கு கூடி இருந்த மொத்த மாணவர்களுள் கடைசி மாணவன் வரைக்கும் தன் கையாலே பரிகள் கொடுத்து அவர்களுக்கும் அதே மேடையில் பேச இடம் கொடுத்த நடிகர் விஜய் சகமனிதனாக நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவரே.
“ அரசியல் என்பது இங்கு அனைவருக்குமானது, மக்களுக்கானது, மக்களுக்கு நல்லன செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் அதை கையில் எடுக்கட்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது “