அதிமுகவுடன் கூட்டணியை தொடர சொன்னால் என் பதவியை ராஜினாமா செய்வேன் – அண்ணாமலை
If Alliance With AIADMK Continues I Will Resign My Leadership Says Annamalai Idamporul
அதிமுகவுடன் கூட்டணியை மேலிடம் தொடர சொன்னால் என் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறி இருக்கிறார்.
பாஜகவுடனான கூட்டணியை, அதிமுக அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்ட நிலையில், டெல்லியில் ஒரிரு நாட்களாவே பாஜக மேலிடத்திடம் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலிடம் அதிமுகவுடனான கூட்டணியை தொடர விரும்பினால் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ பாஜக மேலிடம் அதிமுகவுடன் கூட்டணியை விரும்புவதாக தெரிகிறது. ஆனால் அண்ணாமலை செவி சாய்க்க மறுக்கிறாராம். ஒன்று அண்ணாமலையின் கைகள் கட்டுப் படுத்தப்படும். இல்லையேல் தமிழகத்திற்கு புதிய பாஜக தலைவரை மேலிடம் நியமிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் கசிந்து வருகிறது “