கழகத்தின் பெயரில் மாற்றம் செய்கிறாரா, கழகத்தின் தலைவர் விஜய்?
Actor Vijay Changed His Political Party Name Fact Here Idamporul
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கழகத்தின் பெயரில் சிறு மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் இலக்கண பிழை இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் கூறி வந்த நிலையில், அதை ஏற்றுக் கொண்டு ‘தமிழக வெற்றி கழகம்’ என்பதை, ’தமிழக வெற்றிக் கழகம்’ என கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் மாற்ற முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ தவறுகளை சொன்னால் அதை ஏற்றுக் கொண்டு திருத்த முயற்சிக்கிற பக்குவம், தலைவர்களின் தலைசிறந்த மாண்புகளாக கருதப்படும். அந்த வகையில் நடிகர் விஜய் அவர்கள் அந்த பண்புகளை பெற்று இருக்கிறார் என்பது இதன் மூலம் புலப்படுகிறது “