காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உடைகிறதா?
Congress Led INDIA Alliance Parties Breaking Up Idamporul
மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிரான ’இந்தியா’ கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக உடைவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சி அதளபாதாளத்தில் தொங்கி கொண்டு இருக்கிறது. அவர் பிஜேபியை நாடவும் வாய்ப்பு இருப்பதாக தகவல். உத்தரபிரதேசத்தில் மாயாவதி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, டெல்லியில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட முடிவெடுத்து விட்டதால் இந்தியா கூட்டணி ஒட்டு மொத்தமாக உடையும் நிலையில் இருப்பதாக தகவல்.
ஒரு பக்கம் பிஜேபியின் கூட்டணியை உடைக்கும் யுக்தி, இன்னொரு பக்கம் தொகுதி பங்கீட்டினால் இந்தியா கூட்டணிக்குள்ளேயே ஏற்படும் முரண்பாடுகள் என்ற இரண்டு காரணங்கள் தான் இந்தியா கூட்டணியில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக சொல்லப்படுகிறது.
“ ஆளும் பிஜேபி-க்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைக்கப்பட்ட கட்சிகள் ஒவ்வொன்றாக கலண்டு வருவதால், தேர்தலுக்கு முன்பு இந்தியா கூட்டணி ஒட்டு மொத்தமாக கலையவும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் “