கர்நாடக தேர்தல் | ‘115 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை, ஆட்சியை பிடிக்குமா காங்கிரஸ்?’
Karanata Election Results Congress Leading Ahead Of BJP Idamporul
கர்நாடக தேர்தல் முடிவுகளில் 115 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் நோக்கில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.
224 தொகுதிகளில், 113 இடங்கள் போதுமானது என்ற நிலையில் 115 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இரண்டு இடங்களே முன்னிலை என்னும் போது ஏதேனும் சிறு குழப்பம் ஏற்பட்டாலும் பெரும்பான்மையில் பிரச்சினை வரலாம் என்பதால் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதில் மேலும் சிக்கல் நீடிக்கிறது.
ஒரு பக்கம் கர்நாடக பாஜக சுயேட்சை எம் எல் ஏக்களை தன் வசம் பிடித்து வைக்க அழைப்பு விடுத்து வருகிறது. காங்கிரஸ் ஏற்கனவே இரண்டாக பிளவுற்று கிடப்பதால் நிச்சயம் முதலமைச்சர் யார் என்ற பிரச்சினை வரலாம் என்பதால் பிஜேபி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது.
“ பெரும்பான்மையான இடங்களை காங்கிரஸ் பெற்று இருந்தாலும் கூட ஆட்சி அமைப்பதில் இழுபறி நிச்சயம் நீடிக்கும் என்பதையே தற்போதைய சூழல் உணர்த்துகிறது “