பாலியல் சர்ச்சை வீடியோ – பாஜக பொது செயலாளர் கே.டி.ராகவன் ராஜினாமா
தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் குறித்த பாலியல் சர்ச்சை வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளித்த கே.டி.ராகவன், இது முழுக்க முழுக்க பொய்யான பிரதி வீடியோ என்றும் இதை சட்ட ரீதியாக முறையாக எதிர் கொள்ள போவதாகவும் அதுவரை தன்னுடைய பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்து கொள்வதாகவும் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
பிரபல யூடியூபர் ஒருவர், பா.ஜ.க பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் குறித்த சர்ச்சையான பாலியல் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டிருந்தார். இன்று காலை முதலே அது எல்லா சமூக வலைதளங்களிலும் பரவி வைரலாகி அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. இந்த நிலையில் தான் கே.டி.ராகவன் தனது ட்விட்டரில் ராஜிநாமா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது என்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் வெளிடப்பட்டு இருக்கும் இந்த வீடியோவை சட்ட பூர்வமாக எதிர்கொள்வேன் என்றும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன் தர்மம் வெல்லும் என்றும் கூறி தனது ராஜினாமாவை அறிவித்து இருந்தார்.
“ தற்போதெல்லாம் எதாவது தவறு செய்து விட்டு சிக்கி கொண்டதும் அட்மின் தான் செய்தார், டெக்னாலஜி வளர்ந்து விட்டது என்ற பதில்களை கூறி தப்புவது வாடிக்கையாகி வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் இந்த சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர் “