இனி சட்டப்பேரவையில் புகழ்ச்சியாரம் பேசுபவர்களின் மீது நடவடிக்கை பாயும் – மு க ஸ்டாலின்
சட்டசபையில் ஒரு திட்டமோ அல்லது மசோதாக்களோ நிறைவேற்றுவதற்கு முன் நேரயத்தை விரயமாக்கி புகழ்ச்சியாரம் பேசினால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது கட்சியை சேர்ந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பொதுவாகவே எப்போதும் ஒரு ஆளும் தரப்பு சட்டசபைகளில் திட்டங்களை நிறைவேற்றிடும் போதும் அறிவித்திடும் போதும், திட்டம் சம்பந்தமான அறிவிப்புகள் பத்து நிமிடம் பேசப்பட்டால் ஒரு மணிநேரம் ஆவது தங்கள் தரப்பு தலைவர்/தலைவி குறித்த புகழ்ச்சியாரம் இருக்கும். இது விவாதிக்கும் மற்றும் அறிவிப்புகள் நேரத்தை விரயமாக்கும்.
இதனை கருத்தில் கொண்டே முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தஙகள் கட்சியை சார்ந்த சட்டசபை உறுப்பினர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது திட்டங்கள் அறிவிக்கின்ற சமயங்களில் தன்னைக்குறித்தோ, அல்லது நம்மை வளர்த்து ஆளாக்கிய தலைமை குறித்தோ புகழ்ச்சியாரம் பேசுவதை கைவிடுங்கள். இனி அவ்வாறு பேசி சட்டசபை நேரத்தை விரயம் செய்பவர்களின் மீது தக்க நடவடிக்கை பாயும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
” புகழ்ச்சியாரம் என்றாலே நெகிழ்ந்து விடும் தலைவர்களுக்கு மத்தியில், புகழ்ச்சியாரம் செய்தால் நடவடிக்கை பாயும் என்கின்ற மு க ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கை இன்று சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உளளது”