நடிகர் விஜய் அவர்களை தொடர்ந்து விஷால் அவர்களும் அரசியலுக்கு வருவதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போதைக்கு மக்கள் நலப்பணி மட்டுமே என கூறி விஷால் அறிக்கை விடுத்து இருக்கிறார்.
நடிகர் விஷால் அவர்கள் அரசியலுக்கு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் நடிகர் விஷால், ’தற்போதைக்கு அரசியல் என்ட்ரி இல்லை, மக்கள் நலப்பணி மட்டும் நற்பணிமன்றங்கள் வாயிலாக வழக்கம் போல தொடரும், எதிர்காலத்தில் இயற்கை முடிவெடுத்தால் மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுக்கவும்’ தயார் என அறிக்கை விடுத்து இருக்கிறார்.
” விஷாலின் அரசியல் அறிவிப்பு என்று சமூகவலைதளங்களில் பரவி வந்த வைரல் செய்திக்கு விஷால் ஒரே அறிக்கையில் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். இருந்தாலும் ’இயற்கை மனது வைத்தால்’ என இக்கன்னா போட்டு இருப்பதால் எதிர்காலத்தில் அரசியலுக்கு விஷால் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது “