பறிக்கப்பட இருக்கிறதா பழனிவேல் தியாகராஜன் அவர்களின் அமைச்சர் பதவி?
Palanivel Thiagarajan Side Lined New Cabinet Forming Soon In TN Idamporul
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் அமைச்சர் பதவி பறிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஆடியோ சர்ச்சை ஒன்றில் சிக்கியதில் இருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து கட்சியின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் இருந்து ஒதுக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் அவரின் அமைச்சர் பதவியும் பறிகப்பட இருப்பதாக கட்சி மேலிடங்களில் இருந்து தகவல் கசிந்து வருகிறது. வருகின்ற புதன் கிழமை முதல் அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ சின்ன சின்ன சர்ச்சையில் சிக்கினாலும் கூட அமைச்சர்களோ, அடிப்படை உறுப்பினர்களோ யாராகினும் அதிரடியாக நீக்கப்படுவது உறுதி என ஆளும் அரசு உறுப்பினர்களை எச்சரித்து இருக்கிறது “