பெரியார் பிறந்தநாள் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17, தமிழகத்தில் இனி சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டபேரவை அறிவிப்பின் கீழ் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது பெரியார் அவர்கள் பிறந்த தினமான செப்டம்பர் 17 இனி தமிழகம் முழுக்க சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று விதி எண் 110-இன் கீழ் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்து, ஆண் பெண் இருபாலரின் சமூக நீதிக்காக சம உரிமை கேட்டு போராடிய பெரியாரை நினைவுகூறும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவை விவாதத்தில் தெரிவித்துள்ளார். பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக் கொள்கைகள் மூலம் தமிழக அரசியலில் பல தாக்கத்தை ஏற்படுத்திய தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்தது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

“ தென் இந்தியாவின் சாக்ரடீஸ்-ஆக அறியப்படும் தந்தை பெரியார் அவர்களின் வார்த்தை பலம் மிகவும் பெரிதாக பேசப்படும். அவர் ஒன்று பேசினால் அதற்கு எதிர்கருத்துக்களை தேடுவது அவ்வளவு கடினம், சமூக நீதிக்காகவும், ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் போராடிய வைக்கம் வீரர் அவர்களின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்தது சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது “

About Author