மீண்டும் எம்.பி ஆகிறார் ராகுல் காந்தி, தகுதி நீக்கம் வாபஸ்!
Rahul Gandhi Back As MP 07 08 23 Idamporul
மக்களவை செயலகம் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை வாபஸ் வாங்கியதை மீண்டும் எம்.பி ஆகிறார் ராகுல் காந்தி.
பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எம்.பி பதவியும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்போது உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்து இருப்பதால், மக்களவை செயலகம் தகுதி நீக்கத்தை வாபஸ் வாங்கி இருக்கிறது.
எதிர்கட்சிகளும், மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும், தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கொடுத்த அழுத்தத்தால், தகுதி நீக்கத்தை வாபஸ் வாங்கி இருக்கிறது மக்களவை செயலகம். இதன் மூலம் நாளை ஒன்றிய அரசுக்கு எதிராக நடக்க இருக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில், ராகுல்காந்தி எம்.பியாக கலந்து கொள்ள இருக்கிறார்.
“ ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் வாபஸ் வாங்கியதை அடுத்து, தொண்டர்கள் அதை தேசம் முழுக்க வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர் “