பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 ஆவது பிறந்த தினம் இன்று!

Anna Durai With Karunanidhi

Anna Durai With Karunanidhi

ஆகச்சிறந்த பேச்சாளர், தீர அரசியல் மேதை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர்,திராவிடக் கழகத்தின் தலை சிறந்த தலைவர் மற்றும் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற மூன்றினை தாரக மந்திரமாகக் கொண்டு நன்னெறியுடன் செயல்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் 113-ஆவது பிறந்ததினம் இன்று!

தமிழகத்தில் ‘அண்ணா’ என்கிற பெயரை அவ்வளவு எளிதில் யாராலும் மறைத்துவிடலாகாது. அவர் செய்த பணிகள் அவ்வளவு. இந்தியா குடியரசு நாடாக ஆனதிற்கு பிறகு காங்கிரஸ் தமிழகத்தில் வேரூன்றி நின்றது. அந்த வேரை அறுத்து எறிந்து திராவிட கழகத்தின் ஆட்சியை நிலை நிறுத்திய பங்கு முழுவது அண்ணாவையேச் சேரும்.

காங்கிரஸ் அல்லாத ஆட்சியின் முதல் முதல்வர். திராவிட கழகத்தை தமிழகத்தில் வேரூன்றியவர். தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி என்ற மும்மொழிக்கொள்கையை விரட்டி அடித்து தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை உருவாக்கியவர். மதராஸ் மாநிலம் தமிழ்நாடு எனப்பெயர் பெற காரணம் ஆனவர். மாநில சுயாட்சிக் கொள்கையின் மேல் தனது நிலைப்பாட்டை சாகும் வரையிலும் கொண்டிருந்தவர்.

புதினங்கள், சிறு கதைகள், நாடகங்கள், திரைக் கதைகள் என்று எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கியவர். மிகச்சிறந்த தமிழ்மொழிப் பற்றாளர் மேடைப் பேச்சாளர். இவர் சிலேடை அடுக்குகளில் பேச ஆரம்பித்தால் அதை அன்று கேட்பதற்கென்றே மக்கள் கூட்டம் அலை மோதும். தான் கால் பதித்த துறையில் எல்லாம் வெற்றியை நிலை நாட்டியவர் என்ற பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா.

” உடல் அழிந்தாலும் பெயர் வாழும் என்பதற்கேற்ப, அண்ணா என்ற உடல் எப்போதோ அழிந்து விட்ட போதும் அந்த பெயர் தமிழகத்தில் நங்கூரம் போல நிலைத்து நிற்கிறது. திரும்பும் இடமெல்லாம் சாலைகளாய், நூலகங்களாய், பல்கலைக் கழகங்களாய், பூங்காக்களாய், மணி மண்டபங்களாய் அழிக்க முடியாத சாசனமாய் திகழ்பவர் பேரரிஞர் அண்ணா “

About Author