தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூபாய் 2,63,976 கடன் – வெள்ளை அறிக்கை
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மேலும், ரூபாய் 2,63,976 கடன் இருப்பதாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விடுத்த வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்கு முந்தைய அரசு மூல தன பொருள்களையும் திட்டங்களையும் உருவாக்குவதற்கு ஆக்கிய செலவை விட அரசை நடத்துவதற்கு உபயோகித்த செலவே அதிகம். அதுவே இத்தகைய நிதிச்சுமைக்கு தமிழகத்தை ஆளாக்கியதாக நிதி அமைச்சர் இதற்கு முந்தைய அரசை சாடியுள்ளார்.
இதற்கு முந்தைய அரசு மாநிலத்தின் ஒட்டு மொத்த உற்பத்திக்கு ஏற்ப வரியை வசூலிக்காமல் விட்டதாலும், அரசின் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கி செலவிட்டதாலும், அரசு ஊழியர்களுக்கு சம்பளங்களைக் கொடுப்பதற்கு கூட கடன் வாங்கி வழங்கியதாலும், அரசின் இன்றைய நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக தமிழக நிதி அமைச்சகம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போது தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 61,320 கோடியாக உள்ளதாகவும் தமிழகநிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனோ என்ற பெயர் உலகம் அறிவதற்கு முன்னரே இந்த வருவாய் சரிவை இதற்கு முந்தைய அரசு சந்தித்துவிட்டதாகவும் எதற்கெடுத்தாலும் கடன் வாங்கியே இந்த அரசை நடத்தி தற்போது இத்தகைய சரிவில் தமிழகத்தை தள்ளி விட்டதாகவும் நிதி அமைச்சர் அறிக்கை விடுத்துள்ளார்
“ எல்லா அரசின் நிதிச்சரிவும், வரி உயர்விலும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்விலேயுமே முடியும், அத்தகைய வரி உயர்வும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வும் அடித்தள மக்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்த விலை உயர்வையும் வரி உயர்வையும் சந்திக்க தயாராக இருப்போம் அடித்தள மக்களே “