1 யூனிட் மின்சாரத்திற்கு 2.36 ரூபாய் இழப்பு, 1 கி.மீ பேருந்து பயணத்திற்கு 59.15 ரூபாய் இழப்பு – வெள்ளை அறிக்கை
தமிழகத்தில் அரசுப்பேருந்து 1 கிலோ மீட்டர் தூரம் ஓடினால் 59.15 ரூபாய், போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படுவதாகவும், மின்சாரத்துறையில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு தலா 2.36 ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து இன்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலமாக வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர், தமிழகத்தில் மின்சாரத்துறைக்கு ரூபாய் இரண்டு கோடி கடன் உள்ளதாகவும், போக்குவரத்து துறைக்கு ரூபாய் 1.34 கோடி கடன் உள்ளதாகவும் அறிவித்துள்ளார். ஒரு யூனிட் மின்சாரம் ஓடினால் ரூபாய் இரண்டுக்கு மேல் மின்சார துறைக்கு இழப்பு ஏற்படுவதாகவும், பேருந்து ஒரு கி.மீ ஓடினால் 59 ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இதற்கு முந்தைய அரசு கடன் மட்டுமே வாங்கி வாங்கி அரசை நடத்தியதன் விளைவு இன்று நிதி நிலைமை தமிழகத்தில் மிகவும் மோசமாகி உள்ளது. கடனைத்திருப்பி செலுத்தும் திறன் குறைந்துள்ளதால் வட்டியும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் தற்போதைய மொத்த கடன் ரூபாய் 5.24 கோடி என்று எட்டாத உயரத்தில் உள்ளதாக அந்த வெள்ளை அறிக்கையில் பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ எது எப்படியோ இனி அடித்தள மக்கள் தான் இந்த நிதிச்சுமையை, விலை ஏற்றம் என்னும் பெயரிலும் வரி ஏற்றம் என்னும் பெயரிலும் சுமந்தாக வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் “