அதிகாரப்பூர்வமாக அமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்!
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.
திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதியின் எம் எல் ஏ-வாக அறியப்படும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக வருகின்ற டிசம்பர் 14 அன்று ஆளுநர் மாளிகையில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இது குறித்து முரண்பட்ட கருத்துக்கள் கட்சியிலும், பொதுவெளியிலும் இருந்தாலும் கூட தைரியமாக முடிவெடுத்து அறிக்கை விடுத்து இருக்கிறது ஆளும் தரப்பு “