நிர்மலா சீதாராமனின் மூலம் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை?
மேலிட பாஜக, நிர்மலா சீதாராமனின் மூலம் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆக்ரோஷ பேச்சுக்களால் அதிமுக பாஜகவுடனான கூட்டணியை உதறித் தள்ளி இருக்கிறது. அண்ணாமலையின் செயல்களால் சற்றே கொந்தளித்து இருக்கும் மேலிட பாஜக தற்போது நிர்மலா சீதாராமன் அவர்களின் உதவியுடன் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறதாம்.
“ இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் அண்ணாமலை கலந்து கொள்வது சந்தேகம் எனக்கூறப்படுகிறது. அண்ணாமலையின் செயல்கள் இப்படியே போகுமானால் தமிழக பாஜக தலைவர் வெகுவிரைவில் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது “