சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்ததற்கான ஆதாரத்தை கேட்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்!
Where Is the Proof For Surgical Strike Asked By Chandra Sekara Rao
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு ஆதாரம் கேட்ட ராகுல் காந்தியை குடும்ப ரீதியாக வசைபாடிய பாஜகவினரை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கருத்தால் சுட்டு இருக்கிறார்.
வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போது பல விவசாயிகள் போராட்டத்தில் இறந்தனர். அதற்கும் பாஜக மன்னிப்பு கேட்கவில்லை. தற்போது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கு ஆதாரம் கேட்ட ராகுல் காந்தியை குடும்ப ரீதியாக வஞ்சித்து பேசி இருக்கின்றனர். அதற்கும் மன்னிப்பு கேட்கவில்லை. தற்போது நானும் கேட்கிறேன் ஆதாரம் எங்கே? மத ரீதியாக பிரச்சாரம் செய்து, பொய் பரப்புரைகளை மேற்கொண்டே பாஜக மக்களை கோமாளிகளாக்கி ஆட்சி செய்து வருகிறது என்று சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
“ சர்ச்சைகளை வைத்தே பாஜக அரசு அரசியலில் பிழைப்பு நடத்தி வருவதாக சந்திரசேகர ராவ் வார்த்தைகளால் ஒன்றிய அரசை பெரிதும் சுட்டு இருக்கிறார் “