இறந்ததாக கூறி பொய்யாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட பூனம் பாண்டே, காரணம் என்ன?

Poonam Pandey Is Alive Its All For Cervical Cancer Awarness Fact Here Idamporul

Poonam Pandey Is Alive Its All For Cervical Cancer Awarness Fact Here Idamporul

பூனம் பாண்டேவின் இறப்பு செய்தி அவரே பரப்பி விட்ட வதந்தியாக கூறப்படுகிறது, ஏன் அப்படி செய்தார், எதற்காக? என்பது குறித்து பார்க்கலாம்.

நேற்றைய தினம் 32 வயதே ஆன பாலிவுட் பிரபலம் பூனம் பாண்டே, கருப்பை வாய் புற்றுநோயால் இறந்து விட்டதாக ஒரு செய்தி பரவி வந்தது. அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களிலும் அவர் இறந்து விட்டதாக பதிவிடப்பட்டு இருந்தது. இதனால் விடயம் உண்மையாகவே இருக்குமென கருதி பல பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

ஆனால் அவர் உயிரோடு தான் இருப்பதாகவும், கருப்பை வாய் புற்றுநோய்க்கான ஒரு அவார்னஸ் கிரியேட் செய்யும் நோக்கில், இப்படி ஒரு பொய்யான செய்தியை அவரே பரப்பி விட்டதாகவும் ஒப்புக் கொண்டு அவரது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். கருப்பை வாய் புற்றுநோய், சீக்கிரம் கண்டெடுக்கப்பட்டால் குணப்படுத்தக் கூடியதே, அதற்கு மருந்துகளும், தடுப்பூசிகளும் இருக்கிறது என நல்ல கருத்துக்களை அவர் கூறி இருந்தாலும் கூட, இந்த செய்தியை பரப்ப அவர் எடுத்த ஒரு வினோதமான முடிவு என்பது தவறு என பலரும் அவரை வசை பாடி வருகின்றனர்.

https://www.instagram.com/p/C24C_LyIy6m/



” ஒரு நல்ல விடயத்தை எடுத்துச் சொல்ல பல வழிகள் இருக்கிறது, அதற்கு பொய்யான மரண செய்தி வழியன்று, இந்த பொய் செய்தி பலரின் மெண்டல் ஸ்ட்ரெங்த்தை நிச்சயம் பாதித்து இருக்கும், இது போன்ற விடயங்களை பிரபலங்களே செய்தாலும் தவறு தான், நிச்சயம் இது தண்டனைக்குரியது என இணையவாசிகள் பலரும் பூனம் பான்டேவின் இந்த செயல் குறித்து பதிவிட்டு வருகின்றனர் “

About Author